தமுஎகச மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு
கோவை, செப்.16- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் கோவை மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் 16 ஆவது கோவை மாவட்ட மாநாடு அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டை சிறப்பாக நடந்திடும் வகையில் வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் திங்களன்று கோவை வரதராஜபுரம் சக்கரையார் திரு மண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வரவேற்புக்குழு தலைவராக அழகன் கருப்பண்ணன், செயலாளராக அ.கரீம், பொருளாளராக தி.மணி உள்ளிட்ட 70 பேர் கொண்ட வர வேற்புக்குழு அமைக்கப்பட்டது. மாவட்ட மாநாடு இலட் சினை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பி னர் மு.ஆனந்தன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
