tamilnadu

img

மிகப்பெரிய பொருளாதார தோல்வி

சிறு-குறு தொழில்கள் அபரிதமான ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆகியவற்றால் கோவை போன்ற தொழில் நகரம் கடுமையாக  பாதித்திருக்கிறது  என்பதை தேர்தல் காலத்திலேயே வெளிப்படுத்தினோம். இதன்தொடர்ச்சியாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்னரே நிதியமைச்சரை சந்தித்தோம். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னால்  கோவையில் உள்ள சிறு குறு  தொழில்களுக்கான  ஜாப் ஆர்டருக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அரசின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்னால் ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். கோவை மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள தொழில்கள் கடுமையாக ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதித்திருக்கின்றன. இப்பொழுது பட்ஜெட்டிற்கு பிறகு மிகக் கூடுதலான பாதிப்பை தொழில்கள் சந்தித்திருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்த தேசத்தின் ஆட்டோ மொபைல் தொழில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பகிரங்கமாக அனைத்து உற்பத்திகளையும் நிறுத்திவிட்டதாகவும், சுமார் 40 சதவீத தொழிலாளர்களை வீட்டுக்கு  அனுப்பிவிட்டோம் என்றும் முதலாளிகள் சொல்கிறார்கள். இதன் காரணமாக சுமார் 10 லட்சம் பேருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பில் சிக்கியிருப்பது ஆட்டோ மொபைல் என்கிற ஒரு துறை மட்டுமல்ல; ஏற்றுமதி செய்யக்கூடிய கார்மெண்ட்ஸ், பஞ்சாலை, விசைத்தறி என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு மிகப்பெரிய பொருளாதார தோல்வியைச் சந்தித்த பாஜக அரசு அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகத்தான் 370சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்கிறோம், ராமருக்கு கோவில் கட்டுகிறோம் என்று பேசி வருகிறார்கள்.

===பி.ஆர்.நடராஜன், எம்.பி., கோவை====

;