tamilnadu

img

தமிழக என்டிசி பஞ்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுத்திடுக... எல்பிஎப், சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்.....

கோவை:
ஒன்றிய ஜவுளித்துறைக்கு சொந்தமான தமிழக என்டிசி பஞ்சாலைகளை இயக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என  ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் எல்பிஎப், சிஐடியு தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர்.

ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு  சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள்  உள்ளன.  தமிழகத்தில் கோவையில் 5 ஆலைகளும் கமுதகுடி, காளையார் கோவில் ஆகிய இடங்களில் தலா ஒரு ஆலை என 7 பஞ்சாலைகள்  இயங்கி வருகின்றன. இவற்றில்  ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஆலைகள் மூடப்பட்டன.  இதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டது.பஞ்சாலைகளை அனைத்தையும்  முழுமையாக இயக்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் எனவலியுறுத்தி தொடர்ந்து எல்பிஎப், சிஐடியுஉள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன்தொடர்ச்சியாக எல்பிஎப் பஞ்சாலை சங்க தலைவர் பார்த்தசாரதி, சிஐடியுமில் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சி.பத்மநாபன் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ்கோயலை தலைநகர் தில்லியில் சந்தித்து கோரிக்கைகள் குறித்துபேசினர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து எல்பிஎப், சிஐடியு தலைவர்கள் கோரிக்கை மனுவை அளித்த னர்.இதில்,  தமிழகத்தில் ஏழு என்டிசி பஞ்சாலைகள் இயங்கிவருகின்றன. இப்பஞ்சாலை கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இந்த ஏழுபஞ்சாலைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஐம்பது சதவீதம் ஊதியம் மட்டும் அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் முழு ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாது காக்கப்பட வேண்டும்.பஞ்சாலை இயக்க மூலப்பொருட்களை ரங்கவிலாஸ், பயணியர், காளிஸ்வரா பி மில் ஆகியவற்றிடம் இருந்து எந்த இடையூறும் இல்லாமல் அளிக்கப்பட வேண்டும்.

பங்கஜா, கம்போடியா, கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்டு விவிங், முருகன் பஞ்சாலை ஒன்றாக இணைத்து தொழிலாளர்களை சிப்டு முறையில் பணி அமர்த்தி பஞ்சாலைகளை லாபகரமாக இயக்கிடமுன்வர வேண்டும். இதனை நடைமுறைப் படுத்திட சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அக்கோரிக்கை மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு தொழிற்சங்க தலைவர்கள் முன்வைத்த ஆலோசனைகளை கேட்டுக்கொண்ட ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ்கோயல், தென்னிந்திய பஞ்சாலைகளை இயக்குவதற்கான சாத்தியங்களை ஆராய அதிகாரியை நியமிப்பதாக தொழிற்சங்க தலைவர்களிடம் உறுதியளித்தார்.

;