tamilnadu

img

ததீஒமு அந்தியூர் நிர்வாகிகள் தேர்வு

ததீஒமு அந்தியூர் நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, ஜூலை 8- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அந்தியூர் தாலுகா சிறப்புப் பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா சிறப்புப் பேரவை  செவ்வாயன்று அந்தியூரில் நடைபெற்றது. தாலுகா தலைவர் ஏ.முருகன் தலைமை வகித்தார். பேரவையை துவக்கி வைத்து மாவட்ட துணைத்தலைவர் எஸ். மாணிக்கம் உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாலுகா செயலா ளர் எஸ்.கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். இதில், அந்தியூர் வட்டாரத்தில் பஞ்சமி நிலங் களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இம்மாநாட்டில், தலைவராக டி.ராஜா, செயலாள ராக எஸ்.செபாஸ்டியான், பொருளாளராக சின்னகுளம் துரையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி நிறைவுரையாற்றினார். நிறை வாக வி.கே.ஆறுமுகம் நன்றி கூறினார்.