சம்பளம் வழங்கவில்லை; தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
நாமக்கல், ஆக.28- குமாரபாளையம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியா ளர்கள், தங்களுக்கு சம்பளம் வழங் கப்படவில்லை எனக்கூறி பணி புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த நகராட்சி யில், சுமார் 32 ஆயிரம் குடியிருப்பு கள் உள்ளன. குடியிருப்புகளில் குப்பைகளை மக்கும் குப்பை மக் காத குப்பை என தரம் பிரித்து வீடு வீடாகப் பெற சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப் பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவ னத்தில் சுமார் 105 தூய்மைப் பணி யாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனம் தூய்மைப் பணியாளர் களுக்கு வழங்க வேண்டிய சம்ப ளத் தொகையை மாதந்தோறும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகி றது. இதனால் தங்கள் அன்றாடத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமலும், வீட்டு வாடகைகூட செலுத்த முடியாமலும் தூய்மைப் பணியாளர்கள் தவித்து வருகின்ற னர். இதுகுறித்து பலமுறை தனி யார் நிறுவனம் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும், எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால ஆவேசம டைந்த தூய்மைப் பணியாளர்கள், வியாழனன்று பணிகளை புறக்க ணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தூய்மைப் பணியா ளர்கள் கூறுகையில், முறையாக சம்பளம் வழங்குவதில்லை. இம் மாதத்திற்கான சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை. இப்ப டியே இருந்தால் எங்கள் குழந்தை களுக்கான கல்வி, பொருளாதாரத் தேவை, குடும்பச் செலவு, மருத்து வச் செலவு என அனைத்து விதமான செலவுகளுக்கும் பணமின்றி தவித்து வருகிறோம். தெருவி லுள்ள அனைத்து விதமான குப்பை களையும் கையால் தொட்டு அள்ளு கிறோம்; அப்புறப்படுத்துகிறோம். தொடர்ந்து குப்பையிலே எங்கள் வாழ்க்கை சென்று கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் முறை யான சம்பளம் வழங்காமல் இருப் பது சரியான போக்கு அல்ல. எனவே, உடனுக்குடன் உரிய முறை யில் தூய்மைப் பணியாளருக்கான சம்பளத் தொகையை நிலுவை யின்றி உடனடியாக வழங்க வேண் டும், என்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரி களிடம் கேட்டபோது, குமாரபாளை யம் நகராட்சியில் கடந்த 8 மாதங்க ளாக ஆணையர் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோர் பணியிடம் காலியாக இருந்தது. 4 நாட்களுக்கு முன்பு தான் நகராட்சி ஆணையர் ரமேஷ் என்பவர் சென்னை தலை மைச் செயலகத்தில் இருந்து நேரடி யாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற் றுள்ளார். எனவே, உடனடியாக பணியாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, பணி தொடர அறிவுறுத்தப்படுவார்கள். அவர்க ளுக்கு சேர வேண்டிய நிலுவை சம் பளத் தொகையை முழுமையாக வழங்க ஆவண செய்வதாகவும், கூறினர்.