tamilnadu

img

கோவையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு

கோவையில் டெங்கு காய்ச்சலால் 31 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 31 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவோர் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த மாதத்தில் மட்டும் 31 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதால் பாதிப்பை கட்டுப்படுத்த, 12 வட்டாரங்களில் சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  

டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தினமும் கண்காணிக்கப்படுவதோடு பொதுமக்களும், தங்கள் வீடுகளை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 

;