tamilnadu

img

ரேக்ளா பந்தயம் - சீறிப்பாய்ந்த குதிரைகள்

ரேக்ளா பந்தயம் - சீறிப்பாய்ந்த குதிரைகள்

நாமக்கல், செப். 7- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பவானி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் மற்றும்  குதிரை வண்டி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில்  ரேக்ளா பந்தயம் ஞாயிறன்று  நடைபெற் றது.  11 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த  ரேக்ளா பந்தயம் குமாரபாளையம் காவிரி  நகர் பகுதியில் தொடங்கி சேலம் மாவட்டம்  சங்ககிரி அருகே உள்ள அண்ணமார் கோவில்  வரை, சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவை  எல்லையாக கொண்டு நடைபெற்ற ரேக்ளா  பந்தயம் ஐந்து பிரிவுகளாக நடைபெற்றது. இந்த ரேக்ளா பந்தயத்தில் ,சேலம் நாமக் கல், ஈரோடு, கரூர், மதுரை, ராமநாதபுரம், திரு நெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டது. குதிரைகளுடன் வந்த வீரர்கள் சீறிப் பாய்ந்து எல்லைகளைக் கடந்து வந்து பரிசு களை தட்டிச் சென்றனர். இந்த நிகழ்வை காண ஏராளமான இளை ஞர்களும் பொதுமக்களும் போட்டி நடை பெறும் இடத்தில் குவிந்து போட்டிகளை கண்டு ரசித்தனர்.