tamilnadu

img

அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் வலியுறுத்தல்

அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஆக.22- செட்டிக்கரை ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதி யில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி ஒன்றியம், செட்டிகரை ஊராட்சிக்குட்பட்ட இந் திரா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதியில்லாததால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இந்திரா நகர் இரண்டாவது தெருவிலுள்ள மண் சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறுவிடு கிறது. மேலும், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால், கழிவுநீரும் சாலையில் தேங்கும் அவலம் உள்ளது. இந்திரா நகர் முதல் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட் டுள்ளது. ஆனால், வெளியேற வழியில்லாமல் தெருவின் முன்பே குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஜல்சக்தி  திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலை யில், சாலைப்பணியின் போது குடிநீர் குழாய் சேதமடைந் தது. இதனால் குடிநீர் வருவதில்லை. ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் வருவதில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ப வர் கூறுகையில், சிமெண்ட் சாலை, குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென அதிகாரி களிடம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், குடிநீருக்காக விவசாய கிணறுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள் ளது. எனவே, இப்பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும், என் றார்.