tamilnadu

img

சிபிஎம் ஊழியர் குடும்பம் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிபிஎம் ஊழியர் குடும்பம் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.24– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கொக்கராயன் பேட்டை கிளைச் செயலாளர் நிர்மலா மற்றும்  அவரது குடும்பத்தினர் மீது நடத் தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக்கோரியும் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கடந்த 22.08.2025 அன்று, பள்ளி பாளையம், கொக்கராயன் பேட்டை மேற்குத் தெருவில் உள்ள  கிளைச் செயலாளர் நிர்மலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், அவரை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்மலா வசித்து வரும் அந்த நிலம் தொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது. இதுகுறித்து பேச முடியாது என நிர்மலா தெரிவித்த போது, ஆத்திரமடைந்த வேங்கை  ராஜா, சிவா, சசி, சாந்தி, சந்திரசேகர் மற்றும் சாந்தியின் மகள் உள்ளிட் டோர், நிர்மலாவையும் அவரது குடும்பத்தினரையும் மூங்கில் கம்பு களால் சரமாரியாகத் தாக்கியுள்ள னர். இதில் நிர்மலா தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்தார். இந்தத் தாக்குதல் குறித்து நிர்மலா மொளசி காவல் நிலையத் தில் புகார் அளித்தும், போலீசார் வேங்கை ராஜா என்ற ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளனர். தற் போது அவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதுடன், நிர் மலா குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கொக்க ராயன் பேட்டை நான்கு ரோடு  பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.அசோகன், ஒன்றியச் செய லாளர் எம்.லட்சுமணன் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். இதில், தாக்குதலுக்குக் காரண மானவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும், பேசினர். மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வரும் கட்சி  கிளைச் செயலாளர் மீது நடத்தப் பட்ட இந்தத் தாக்குதலுக்கு காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி கிளைச் செயலாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் நிர்மலாவின் குடும்பத்தி னர் திரளானோர் பங்கேற்றனர்.