tamilnadu

img

கோவை: குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த மக்னா யானை பிடிபட்டது!

கோவை குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக சுற்றித்திரிந்த மக்னா காட்டு யானை பேரூர் பகுதியில் பிடிபட்டது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் ஊருக்குள் புகுந்த மக்னா யானையை, கடந்த 6-ஆம் தேதி சின்னதம்பி என்ற கும்கி யானையை கொண்டு பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. வனப்பகுதியிலேயே சுற்றித்திரிந்த அந்த மக்னா யானை, கடந்த 21-ஆம் தேதி காலை 5 மணி அளவில் திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறியது. பொள்ளாச்சி மாவட்டம் சேத்துமடை, நல்லூத்துக்குழி, காக்காபுதூர் வழியாக 100 கி.மீ பயணம் செய்து கோவை மதுக்கரை பகுதிக்கு நேற்று வந்தடைந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்குள் புகுந்த காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.  இதனிடையே கோவை மாநகராட்சிக்குள் யானை தொடர்ந்து சுற்றி வருவதால் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து, கலீம், சின்னத்தம்பி, முத்து ஆகிய மூன்று கும்கி யானைகளை கோவைக்கு வரவழைத்தனர். 

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்த மக்னா யானை, பேரூர் பகுதியில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது.

;