tamilnadu

img

எம்.கே.பாந்தே நூற்றாண்டு விழா திருப்பூரில் சிஐடியு சிறப்புப் பேரவை

எம்.கே.பாந்தே நூற்றாண்டு விழா திருப்பூரில்  சிஐடியு சிறப்புப் பேரவை

திருப்பூர், அக். 3 - இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) தலைவ ராக, பொதுச் செயலாளராக இருந்த டாக்டர் எம்.கே. பாந்தே மிகச்சிறந்த தொழிற் சங்கத் தலைவர், பல்வேறு  பிரதான தொழில் துறைக ளில் தொழிற்சங்கங்களை ஏற்படுத்தியவர், ஆழ்ந்து கற்ற அறிஞர் என்று திருப்பூ ரில் நடைபெற்ற சிறப்புப் பேர வையில் புகழாரம் சூட்டப்பட் டது. தோழர் எம்.கே.பாந்தே நூற்றாண்டு விழா  மற்றும் சர்வதேச தொழிற்சங்க சம்மேள னம் (டபிள்யூ.எப்.டி.யு)-வின் 80ஆம் ஆண்டு  விழா சிறப்புப் பேரவை திருப்பூர் சிஐடியு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள் ளியன்று நடைபெற்றது. சிஐடியு திருப்பூர்  மாவட்ட துணைத்தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில் சிஐடியு மாநிலச் செயலாளர் தங்கமோகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றி னார். அப்போது சிஐடியுவின் தலைவராக,  பொதுச் செயலாளராக செயல்பட்ட டாக்டர்  எம்.கே.பாந்தேவின் தொழிற்சங்க பணிகளை யும், சிறந்த பண்பியல்புகளையும் எடுத்துக்  கூறினார். அதேபோல் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படைத் தத்து வத்தின் அடிப்படையில், போர்க்குணத் தோடு தொழிலாளி வர்க்கத்தின் சோசலிஸ்ட் லட்சியத்திற்காக பாடுபட்டு வரும் சர்வதேச  தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிகளை யும் தங்கமோகன் விளக்கிக் கூறினார். இந்த பேரவையில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செய லாளர் பி.முத்துசாமி உள்பட சிஐடியுவின் இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.