tamilnadu

img

கே.ஏ.ஜி டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

நாடு முழுவதும் உள்ள கே.ஏ.ஜி டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

கே.ஏ.ஜி டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
டைல்ஸ் விற்பனையில் வந்த வருமானத்திற்கு வரி கட்டாமல் ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, கோவை, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  
கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள கே.ஏ.ஜி  டைல்ஸ் குடோனில் காலை 9 மணியிலிருந்து இந்த சோதனையானது நடத்து வருகிறது. கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடோனில் உள்ள பொருட்களையும், ஆவணங்களில் இருப்பவை குறித்தும் அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.  .
 

;