india

img

வருமான வரித் தாக்கல் செய்ய அவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு....

புதுதில்லி:
வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் மின்-தாக்கல்தளமான www.incometax.gov.in 2021 ஜூன் 7 அன்று தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்தே அதிலுள்ள குறைபாடுகள்மற்றும் சிரமங்கள் குறித்து வரிசெலுத்துவோர் மற்றும் பணியாளர்கள் தகவல் அளித்து வந்தனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இன்போசிஸ் நிறுவனத்துடன் நிதி அமைச்சகம் தொடர்ந்து பேசி வருகிறது.2021 செம்டம்பரில் தினமும் 3.2 லட்சம்வருமான வரி விவரங்களின் தாக்கல்கள் நடைபெற்று வரும் நிலையில், 2021-22 மதிப்பீட்டுவருடத்தில் 1.19 கோடி வருமான வரி விவரங்களின் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 76.2 லட்சத்திற்கும் அதிகமான வரிசெலுத்துவோர் ஆன்லைன் முறை மூலம்செய்துள்ளனர். பல்வேறு தொழில்நுட்பசிக்கல்கள் தீர்க்கப்பட்டாலும் இன்னமும் தாக்கல் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. 

இந்நிலையில், நேரடி வரிகள் வாரியம்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 31-ல் இருந்து 2021 செப்டம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2021 டிசம்பர் 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.2020-21 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 30 -லிருந்து 2021 அக்டோபர் 31 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 15 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பரிவர்த்தனை அல்லது சட்டத்தின் 92ஈ பிரிவின் கீழ் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஈடுபட்டநபர்கள் 2020-21-ம் வருடத்திற்காக சமர்ப்பிக்க வேண்டிய கணக்காளரிடம் இருந்து பெற்ற அறிக்கைக்கான கடைசி தேதி 2021அக்டோபர் 31-ல் இருந்து 2021 நவம்பர் 30ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 31 வரை மேலும்நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.