economics

img

ரூ.1000 கோடி போலி கணக்கு - வருமான வரித்துறையிடம் சிக்கிய ஹீரோ மோட்டோ

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ரூ.1000 கோடி ரூபாய் மதிப்பில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான  ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள இரண்டு ஹீரோ மோட்டோ கார்ப் அலுவலகங்களிலும், அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவன் முன்ஜாலின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில் வரி ஏய்ப்பு செய்துள்ளதை பேப்பர் ஆதாரங்களாகவும், டிஜிட்டல் தரவுகளாகவும் வருமான வரித்துறையினர் கண்டுப்பிடித்துள்ளது. இந்த தரவுகள் மார்ச் 23 முதல் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சோதனையில் கண்டுபிடித்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளது. 

இதேபோல் டெல்லியின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் சத்தர்பூர் பகுதியில் முன்ஜால் பண்ணைவீட்டை வாங்குவதற்காகச் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கி மூலம் அல்லாமல் பணமாக பரிமாற்றம் செய்து வரி ஏய்ப்பு செய்ததற்கான தரவுகளும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் நேற்று 8 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.