tamilnadu

img

ஏகலைவா பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக

ஏகலைவா பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக

மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராட்டம்

சேலம், ஜூலை 3- ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி யில் சுமார் 320 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு போது மான கழிப்பிட வசதி, கட்டட வசதி, சுகாதார வசதி இல்லாததால் பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள் ளது. இதனிடையே, இப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொருட்களை இடமாற்றம் செய்ய வந்த  லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மேலாண்மைக் குழு வில் இப்பிரச்சனை சம்பந்தமாக விவாதிக் கப்பட்டு, ஏற்காடு புலியூர் பகுதியில் புதிய கட் டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தொடர்ந்து ஏற்காடு பகுதியிலேயே பள்ளி செயல்பட பழங்குடியினர் நலத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாக காரிப்பட்டியிலுள்ள முருகேசன் பாலிடெக் னிக் கல்லூரிக்கு மாற்றம் செய்து, மாணவர்க ளின் கல்வி படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், அபிநவம் ஏகலைவா மாதிரி பள்ளியில் சுமார் 6 ஆண்டுகளாக பெற்றோர் களுக்கான கூட்டம் இதுவரை நடத்தப்பட வில்லை. இப்பள்ளியில் நுழைவுத்தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களை சேர்ச் கைக்கு அனுமதிக்காமல் லஞ்சம் கேட்டு  மிரட்டுபவர்கள் மீது அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்  கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சின்னமணி தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் பி.ஆர். மாதேஸ்வரன், சி.வெங்கடேசன், தர்மலிங் கம், சிபிஎம் செயலாளர் ஏ.பாக்கியராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.