tamilnadu

img

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக.18- அரக்க குணம், ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து  தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னையில் 12.8.2021 தொடர் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. அதில் பங்கேற்ற சாலைப் பணியாளர்களை கைது செய்து, கொடுமைப்படுத்திய அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து தமிழ் நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஈரோடு கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு அரக்க முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட் டத் தலைவர் எம்.ஆர்.செங்கோட் டையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைத்  தலைவர் சிங்கராயன் கண்டன உரை யாற்றினார். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பாபு, கோட்ட இணைச்செயலாளர் மகேந் திரன், எஸ்.சண்முகசுந்தரம், ஜி.நல்ல சாமி ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில், அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோ கரன் நிறைவுரையாற்றினார். முடி யில், சங்கப் பொருளாளர் மணிகண் டன் நன்றி கூறினார். கோபியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் என்.முருகேஷ் தலைமை வகித்தார்.  இதில், மாநிலச் செயலாளர் செந்தில் நாதன் சிறப்புரையாற்றினார். நிர் வாகிகள், எம்.ஆர்.செங்கோட்டை யன், கருப்புசாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். கோவை நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் முருகேசன் தலைமை ஏற் றார். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் கண்டன உரையாற்றினார்  கோட்டப் பொருளாாளர் சிவக்குமார் நன்றி கூறினார். பொள்ளாச்சி கோட் டம் சார்பில் பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், கோட்டச் செயலாளர் ச.ஜெகநாதன், கோட்ட நிர்வாகிகள் சின்ன மாரி முத்து உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.