tamilnadu

img

மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது - பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்

விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினரை பயண்படுத்தி அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,  

விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுசம்பந்தமான கருத்து கேட்பு கூட்டத்திலேயே விவசாயிகள் தங்களின் அழுத்தமான ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்கள். இதற்கு முன்னர் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைத்து குறைந்த அழுத்த மின்சார கேபிள்கள் கொண்டு சென்றனர். தற்போது அமைக்கப்படும் மின்கோபுரங்கள் மிக அதிக அளவிலான 400 வோல்ட் மின்சாரத்தை கொண்டு செல்ல கம்பிகள், கேபிள்கள் அமைக்க இந்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இது  தங்களின் வாழ்வத்தாரத்தை பெரிதும் பாதிக்கும் என விவசாய பெருங்குடி மக்கள் தங்களின் கருத்தை சொல்லி உள்ளார்கள். இந்நிலையில் கேபிள் ஏக்ட் அடிப்படையில் அடாவடியாக மாநில அரசை இனைத்துக்கெண்டு பவர் கிரிட் நிறுவனம் தங்களுக்கு தேவையான போலிஸ் உதவியை பெற்றுக்கொண்டு உள்ளது. இதன்மூலம் விவசாயிகளை அச்சப்படுத்துவது, மிரட்டுவது, தாக்குவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற பல அராஜக  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஜனநாயக அரசு செய்கின்ற பணி அல்ல என்பதை அரசுக்கு தெரியப்படுத்துகிறோம். இப்போதுதான் சூலூர் மக்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள். தனக்கு வாக்களித்த மக்களையே மீண்டும் வதைக்கிற அரசாக அதிமுக அரசு உள்ளது. மாநில அரசு காவல்துறையை கட்டுப்பாடற்ற முறையில் விவசாயிகளுக்கு எதிராக பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக இத்தகைய நடவடிக்கையை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட விவாசாயிகளை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

;