முறையாக குடிநீர் விநியோகம் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
உடுமலை, செப்.22 - சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை முறைப் படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரிப்பாளையம் தெற்கு கட்சி கிளைச் செயலா ளர் ரத்தினசாமி தலைமையில் உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, சின்னவீரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சேகர்புரம், விஜய்நகர், சித்தாண்டீஸ்வரர் லே-அவுட், மலர்வழி நகர், குமார் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை முறைப் படுத்தி போதுமான அளவில் பொதுமக்க ளின் பயன்பாட்டுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சாக்கடைகளை அவ்வப் போது தூய்மைப்படுத்தி கொசு மருந்து தெளித்து நோய் பரவாமல் தடுக்க வேண்டும். உப்பு தண்ணீர் பைப்புகளை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில், கட்சி யின் நகரச் செயலாளர் தண்டபாணி, மாவட் டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரக்குழு உறுப்பினர் தோழன் ராஜா, கட்சிக்கிளை உறுப்பினர் பொன்னுச்சாமி மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஷெல்டன், ஓரிரு நாளில் நேரில் ஆய்வு செய்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள் ளார்.