பேருந்து நிலையத்தை மாற்ற எதிர்ப்பு: சிபிஎம் மனு
நாமக்கல், ஆக.2– ராசிபுரம் புதிய பேருந்து நிலை யத்தை இடமாற்றம் செய்யக் கூடாதென தெரிவித்து, நாமக்கல் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியி னர் வெள்ளியன்று மனு அளித்த னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் தற்போது இயங்கி வரும் புதிய பேருந்து நிலையம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எவ்வித முன்னறி விப்புமின்றி பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் ஊராட்சி பகு திக்கு மாற்றுவது என ராசிபுரம் நக ராட்சி முடிவெடுத்துள்ளது. நக ராட்சிக்கு தொடர்பில்லாத அணைப்பாளையம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட் டால், நகரை சுற்றியுள்ள கிராமப் புறப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப் படுவார்கள் குறிப்பாக, வணிக மையமாக உள்ள ராசிபுரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளது. இதில், பணியாற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்க ளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். நகரில் வசித்துக் கொண்டு வெளியூர் வேலைக்கு செல்லும் பொதுமக்களின் பயண நேரம் அதிகரிக்கும். இரவு நேரங்களில் பெண்கள், முதி யோர் நகரத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் சூழல் ஏற் படும். அணைப்பாளையம் ஊராட்சி யில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் தனியார் ரியல் எஸ்டேட் அதிப ருக்கு சொந்தமானது. அந்நிலம் அணைப்பாளையம் ஏரி நீர் பாசன பகுதி நிலம் ஆகும். பல்லாண்டு காலமாக விலை போகாத அவரது 150 ஏக்கர் நிலங்களின் சந்தை மதிப்பை அதிகரிக்க பேருந்து நிலையம் அமைக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் அதன் சந்தை மதிப்பு பலகோடி ஆகும். சில தனிநபர்களின் சொந்த ஆதாயத்திற்காக மக்க ளின் வாழ்வாதாரத்தை சூறையாடி பேருந்து நிலைய இட மாற்றத்தை சட்ட விதிகளுக்கு மாறாக அரசும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் அசுர வேகத்தில் நிறை வேற்ற முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த நகர மக்களும் திட்டத்தை எதிர்த்து முழு கடை யடைப்பு, உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம் என பல்வேறு வடிவங்களில் தங்களது எதிர்ப்பு களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்ற வழக் கில், பொதுமக்களின் கருத்துக் களை பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. அதனடிப்படை யில், ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஜூலை 25 முதல் ஆக.1 வரை பொதுமக்களின் ஆட் சேபனைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பேருந்து நிலை யத்தை அணைப்பாளையம் பகு திக்கு மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் அறி வுடைநம்பி, மாவட்டக்குழு உறுப்பி னர் கோ.செல்வராசு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.ராணி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் எம். தங்கராஜ், மாவட்ட நிர்வாகி சதீஷ், கட்சி கிளைச் செயலாளர்கள் சி. சண்முகம், இளங்கோ, செந்தமிழ் செல்வி, எம்.துரை, சிஐடியு தலை வர் எம்.ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.