குறிப்பிட்ட காலத்துக்குள் வரைபட அனுமதி வழங்க கட்டடத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்
உதகை, ஜூலை 2- குறிப்பிட்ட காலத்துக்குள்வரைபட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கட்டடத் தொழிலாளர் நல சங்கத்தினர் புதனன்று நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம் மனு அளித்தனர். அம்மனுவில், நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்த லூர் தாலுகா சார்பில் கட்டட வரைபட அனுமதிக்கு விண்ணப்பித்தால் நகராட்சி அனுமதி தர ஒரு வருடம் ஆகிறது. இதனால் கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்த 50 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கட்டிட வரைபட அனுமதியை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கவும், பழைய வீடு களை உடைக்கும்போது வரும் கழிவுகளை அகற்று வதற்கு அனுமதி வழங்கவும், சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.