tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மாட்டிக்கொண்ட குழந்தையை  மீட்ட தூய்மைப்பணியாளர்

கோவை, ஜூலை 4- எரிவாயு சிலிண்டர் எரிந்து கொண்டிருந்த நிலையில், உள் பக்கமாக தாழிட்டு சிறுவன் மாட்டிக்கொண்ட நிலையில், அவரை மீட்ட தூய்மைப் பணியாளரின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், கணபதி அருகே ஆவாரம்பாளை யம் பகுதியில் உள்ள விஜி ராவ் நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பெண் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டு  இருந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், வீட்டிற்குள் இருந்த மூன்று வயது குழந்தை கதவை உள்பக்க மாக தாழிட்டு மாட்டிக் கொண்டது. இதனையறிந்த குழந்தை யின் தாய் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து கதறி அழுதார். இந்நிலையில் அந்த வழியாக தூய்மைப் பணி செய்து கொண்டு இருந்த தூய்மைப் பணியாளரிடம் இதுகுறித்து கூறிய அழுதுள்ளார். சமையல் எரி வாயு திறந்த நிலையில், வீட்டிற்குள் சிறுவன் இருந்த,  சூழ்நிலையை உணர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு வீட்டின் கதவை உடைத்து சிறுவனை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

சிறுமி கருத்தரிப்பு: போக்சோவில் வழக்கு

சேலம், ஜூலை 4- எடப்பாடி அருகே 15 சிறுமி கருத்தரித்த நிலை யில், போக்சோ சட்டத்தின் கீழ் லாரி ஓட்டுநர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்துள் ளனர். சேலம் மாவட்டம், எடப் பாடி பகுதியைச் சேர்ந்த  15 வயது சிறுமி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.  அப்போது அவரை மருத்து வர்கள் பரிசோதனை செய்த தில், 4 மாதகர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. திருமண வயதிற்கு முன்பே  கர்ப்பிணியானது பற்றி  மருத்துவர்கள் விசாரித்த தில், காதல் திருமணம் செய்து வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதைய டுத்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத் திற்கு மருத்துவர்கள் தகவ லளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் (பொ)  தனலட்சுமி, உதவி ஆய்வா ளர் மீனா ஆகியோர் சிறுமியி டம் விசாரணை மேற்கொண் டனர். அதில், எடப்பாடி, கலர் காடு சித்திரபாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராம்குமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இரு வரும் காதலித்து வந்துள் ளனர். மேலும், கடந் தாண்டு பிப்ரவரி மாதம் இரு வரும் வீட்டை விட்டு வெளி யேறி திருமணம் செய்து கொண்டு, ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். அதனால் சிறுமி கருத்தரித்தது தெரி யவந்தது. இதையடுத்து சிறு மியை திருமணம் செய்து 4  மாத கர்ப்பிணியாக்கிய ராம் குமார் மீது போக்சோ சட்டத் தின் கீழ் போலீசார் வழக்குக் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.