tamilnadu

img

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

கோவை, ஜூலை 3- பந்தய சாலைப் பகுதியில் நடைபெற்ற போதை யில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடை பிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போதையில்லா தமிழ்நாடு - 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் விழிப்பு ணர்வு பேரணி வியாழனன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி  வைத்தார். பந்தய சாலைப் பகுதியில் நடைபெற்ற இந்த  பேரணியில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்பு ணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.