நிரம்பி வழியும் அவலாஞ்சி அணை
உதகை, ஜூலை 27- நீலகிரியில் தொடரும் கனமழையின் காரணமாக, அவ லாஞ்சி அணை நிரம்பியதையடுத்து, 1000 கனஅடி நீர் திறக் கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அவலாஞ்சி அணை யின் மொத்த உயரமான 171 அடி வரை தண்ணீர் நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி இரண்டு மதகுகளின் வழியாக விநாடிக்கு, அணைக்கு வரும் 1000 கனஅடி நீர், உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தலார் ஊராட்சி மற்றும் பிக்கட்டி பேருராட்சி பொது மக்கள், ஆற்றங்கரை யோரம் விவசாயப் பணிகள் மேற்கொள்ள செல்ல வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள் ளாட்சி அமைப்பு ஊழியர்கள் ஒலிபெருக்கி வாயிலாக கரை யோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். சிறுவாணி அணை கனமழை காரணமாக கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.67 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், தற்போதைய நீர்மட்ட உயர்வு பொதுமக்களிடையே நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரின் குடிநீர் தேவைக் காக அணையிலிருந்து வழக்கமான 101.40 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.) அளவுக்கு பதிலாக 95.97 எம்.எல்.டி. தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவ தால், அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து குடிநீர் தட்டுப் பாடு முற்றிலும் நீங்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரி விக்கின்றனர்.