மணல் கடத்தலை தடுத்த விஏஓ மீது தாக்குதல்
ஊழியர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்
நாமக்கல், ஆக.20- மல்லசமுத்திரம் அருகே மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலு வலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஊழி யர்கள் பணி புறக்கணிப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மல்லச முத்திரம் ஒன்றியம், பாலமேடு கிரா மத்தில் தனபால் என்பவருக்கு சொந் தமான நிலத்தில், வையப்பமலை மொஞ்சனூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உரிய அனுமதி இல்லாமல் செவ்வாயன்று மண் அள்ளிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகி றது. இதனையறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி, அனு மதியில்லாமல் மண் அள்ளக்கூடாது என தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, பாலமேட்டில் உள்ள சிவகாமி வீட் டிற்கு சென்ற சீனிவாசன், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இத னால் காயமடைந்த சிவகாமி ராசி புரம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எலச்சிபாளையம் காவல் துறையி னர் சீனிவாசனை கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து திருச்செங்கோடு வட் டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப் பைச் சேர்ந்தவர்கள் புதனன்று பணி புறக்கணிப்பு செய்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் ராஜா கூறு கையில், பாலமேடு கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி, அனுமதியில்லா மல் மணல் அள்ளுவதை தடுத்த கார ணத்தால், அவரது வீட்டிற்கே சென்று சீனிவாசன் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதுபோன்ற நபர்க ளால் அரசுப்பணி செய்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பணி பாதுகாப்புச் சட் டத்தை ஏற்படுத்த வேண்டும். சிவ காமியை தாக்கிய சீனிவாசனை குண் டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என்றார்.