tamilnadu

img

ரோலக்ஸை பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை வரவழைப்பு

ரோலக்ஸை பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை வரவழைப்பு

கோவை, செப்.10- தொண்டாமுத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை  சேதப்படுத்தி வரும் ஒற்றை யானை யைப் பிடிப்பதற்காக, மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள் ளது. கடந்த சில மாதங்களாக ‘ரோலக்ஸ்’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் யானை, வனப்பகுதியிலிருந்து வெளி யேறி தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள், அந்த யானையைப் பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லுமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத் தனர். இதையடுத்து, ரோலக்ஸ் யானை யைக் கட்டுப்படுத்தும் பணிக்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து  இரண்டு கும்கி யானைகள் கடந்த சனிக் கிழமை வரவழைக்கப்பட்டன. யானை யைப் பிடிப்பதற்கான நடவடிக்கை களை வனத்துறையினர் தீவிரப்படுத்தி னர். தற்போது, மதுக்கரை வெள்ளப்பதி வனப்பகுதியில் இருக்கும் அந்த யானையைத் தாளியூர் பகுதிக்கு விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரோலக்ஸ் யானை யைப் பிடிப்பதற்காக வால்பாறை யானைகள் முகாமில் இருந்து ‘கபில் தேவ்’ என்ற மற்றொரு கும்கி யானை  புதனன்று கொண்டு வரப்பட்டது. வனத்துறையினர் தொடர்ந்து யானை யின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். விரைவில் தாளியூர் வனப்பகுதியில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, வேறு பாது காப்பான வனப்பகுதிக்கு மாற்ற வனத் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரி கிறது.