tamilnadu

img

வால்பாறையில் சிறுத்தை தூக்கி சென்ற சிறுமி உயிரிழப்பு!

வால்பாறை,ஜூன் 21- வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் மகளான 4 வயது சிறுமியை மரங்கள் நடுவே பதுங்கியிருந்த சிறுத்தை தாய் கண் முன்னே தூக்கிச் சென்றது.
தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர்  ட்ரோன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் 18 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, குழந்தையின் உடல் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது