tamilnadu

img

தொடரும் வாக்கு இயந்திரக் கோளாறுகள் பாஜகவுக்கு போட்ட 9 வாக்குகளை 17-ஆக மாற்றிய வாக்கு இயந்திரம்

பனாஜி, ஏப்.25-ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்குப் பதிவுக்கு முன்னதாக, சோதனை அடிப்படையில் வாக்குகளை பதிவுசெய்து பார்ப்பது வழக் கம். அரசியல் கட்சிகளின் முகவர்கள் இந்த வாக்குகளை செலுத்தி, அதனைச் சரிபார்ப்பார்கள்.அந்த அடிப்படையில், கோவா மாநிலத்திலுள்ள வாக்குச் சாவடி எண் 31 மற்றும் 34-இல் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இங்கிருந்த 6 வேட்பாளர்களின் முகவர்களுக்கு தலா 9 வாக்குகள் விகிதம்வழங்கப்பட்டு, அந்த வாக்குகள் குறிப்பிட்ட சின்னங்களுக்குத்தான் விழுகிறதா? என்று பார்த்துள்ளனர். ஆனால், இந்த சோதனை முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள் ளன.ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப் பட்ட வாக்குகள் தலா 9 மட்டும்தான் எனும்போது, பாஜக-வுக்கு மட்டும் 17 வாக்குகள் விழுந்ததாக, மின் னணு இயந்திரம் காட்டியுள்ளது. அதாவது 8 வாக்குகளை கூடுதலாககாட்டியுள்ளது. மற்ற கட்சிகளில் காங்கிரசுக்கு சரியாக 9 வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு ஒன்று குறைவாக, 8 வாக்குகளும், சுயேச்சைக்கு 8 வாக்குகள் குறைந்து, வெறும் 1 வாக்கும் பதிவாகியிருக்கிறது.இதையடுத்து, இவ்விரு வாக்குச் சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, வேறு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடத்தப்பட்டுள்ளது.இத்தகவலை கோவா மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் எல்விஸ்கோம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கேரளத்தில், கை சின்னத்திற்கு நேராக இருக்கும் பொத்தானை அழுத்தினால், தாமரை சின்னத்திற்கு வாக்குகள் பதிவானதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

;