எங்கடா வந்தீங்க நீங்க?
எதுக்குடா வந்தீங்க? போங்க! - (எங்கடா)
மூணாப்புல அரசுத் தேர்வு
முழிக்காதே, வருமே சோர்வு!
காணாமத்தான் போவீங்க பெயிலாகி
காடு, மேடு சுத்துவீங்க வெயிலோடு! - (எங்கடா)
அஞ்சாப்புல மீண்டும் அரசுத் தேர்வு
அசராமப் படிச்சாத்தான் நீங்க பாசு
பஞ்சாய்ப் பறந்து போவீங்கடா
படிப்பு மறந்து ஆவிங்கடா லூசு! - (எங்கடா)
தப்பித் தவறி மேலே வந்தா
காத்திருக்குது எட்டாப்புல தேர்வு!
மப்புப் பிடிச்சுத் தொடரணுமா,
மண்டையில பாசி படரணுமா! - (எங்கடா)
தொழிற் கல்வி என்ற பேரால் பாரு
தொடங்கிடுமே எட்டாப்புல கூறு!
பழிபாவம் அறியாத பெற்றோர்
பரிதவிப்பார் வழியேதும் அற்றே! - (எங்கடா)
பித்துப் பதினொண்ணு பன்னிரெண்டு
பாங்காக அரசுத் தேர்வு உண்டு!
தத்தித் தத்தி வந்தாலும் நீங்க
தடுக்கி விழுந்து புரியாம ஏங்கி! - (எங்கடா)
இதுதாண்டா புதிய கல்விக் கொள்கை
இனிமேலும் ஏழைக்குக் கல்வி இல்லை!
முதுகு நிமிராம முடங்கிக் கிடங்க
முன்னோர்கள் போல அடங்கி ஒடுங்கி! - (எங்கடா)