tamilnadu

img

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதா?

சேலம், ஆக. 5- சேலம் உருக்காலையை தனி யார்மயமாக்கிடும் மத்திய பாஜக அரசை கண்டித்து சேலம் உருக் காலை தொழிலாளர்கள் ஆலை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலை 1970 ல் துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் செயில்  நிறுவனத்தின் கீழ் இயங் குகிறது. இதன் முக்கிய உற்பத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்  எனப்ப டும் துருபிடிக்காத எஃகு உற்பத்தி செய்வதாகும். இந்திய நாட்டின் நாணயம், பாத்திரங்களுக்கு தேவையான ஸ்டெயின்லஸ் ஸ்டீல் முதல் ரயில் பெட்டிகள், செயற்கைகோள்கள், அணு உலைகள் ஆகியவற்றுக்கு தேவை யான ஸ்டீல் வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்றைய இதன் உற்பத்தி திறன் 6 லட்சம் டன். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற் பத்தியில் சர்வதேச அளவில் 12 முன்னணி நிறுவனங்களில் சேலம்  உருக்காலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆலையில் 2,200 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். சுமார் 5 ஆயிரம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ரூ.136 கோடி முதலீட்டில் 32 ஆயிரம் டன் உற்பத்தி திறனுடன் துவங்கப் பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபா யாகும். உண்மையான இதன் மதிப்பு இந்த உத்தேச மதிப்பை விட பல மடங்குகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனி யார்மயமாக்கிடும் நோக்கில் மத் திய பாஜக அரசின் அறிவுறுத் தலின்படி செயில் நிர்வாகம் சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது.  பொதுத்துறை நிறு வனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், டெண்டர் அறிவிப்பை திரும்ப பெற வேண் டும் என்பதனை வலியுறுத்தியும் சேலம் உருக்காலை தொழிலா ளர்கள் பல கட்ட போராட்டங் களை நடத்தி வந்தனர். இந்நிலை யில் சேலம் உருக்காலை பாது காப்பு ஒருங்கிணைப்பு குழு, அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் திங்களன்று 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் தில் சேலம் உருக்காலை பாது காப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் பங்கேற்றுள் ளனர்.

;