tamilnadu

img

தில்லி வன்முறை - பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்திடுக

கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, பிப். 28 - தில்லி வன்முறைக்கு காரண மான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்தும், வன்முறையை தூண்டிவிட்ட பாஜக அமைச்சர் மற்றும் தலை வர்கள் மீதும் வழக்கு பதியக்கோரி கோவையில் வெள்ளியன்று வழக் கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக நாடு முழுவதும்  போராட்டம் நடைபெற்று வருகி றது. இதன்ஒருபகுதியாக தலைந கர் தில்லி ஷாகின்பாக்கில் நாற் பது நாட்களுக்கு மேலாக அமைதி யான முறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வந்தது.  இந்நிலையில், தலைநகர் தில்லி யில் குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு ஆதரவான போராட்டம் என்கிற பெயரில் பாஜக மற்றும்  ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்ட மிட்டு வன்முறை வெறியாட் டத்தை அரங்கேற்றினர். இதில்  30 க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர்.

மேலும், சிறுபான்மையினர் வீடுகள் மற்றும் கடைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் கோடிக்கணக்கான ரூபாய்  மதிப்பிலான சொத்துக்கள் சேத மடைந்தது. இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம்  எழுந்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக தில்லி கலவரத்திற்கு  காரணமான பாஜக மற்றும்  ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கண்டித்து கோவையில் வழக்க றிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கம் சார்பில்  கோவை  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கண்டித்து முழக் கங்களை எழுப்பினர்.  மேலும்,  தில்லி வன்முறைக்கு காரணமான பாஜக அமைச்சர் மற்றும் தலை வர்கள் மீது நீதிமன்றம் உத்தர விட்டும் தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. கலவரத்திற்கு காரணமான பாஜக  மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலை வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி னர்.  முன்னதாக, இப்போராட்டத் திற்கு திமுக வழக்கறிஞர் அணி யின் தலைவர் கே.எம் தண்டபாணி  தலைமை தாங்கினார். இதில்  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங் கத்தின் நிர்வாகிகள் வி.சுந்தர மூர்த்தி, மாசேதுங், கோபால் சங்கர், மு.ஆனந்தன், ஜோதி குமார், பியுசிஎல் பாலமுருகன், மதிமுக வழக்கறிஞர் அணியின் என்.சிவஞானம் மற்றும் மலர வன், துரை இளங்கோ,  திருஞான சம்பந்தம், பிரபாகரன், வெண் மணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டத்தில் ஏராமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.