tamilnadu

img

உடுமலை: குடிநீர் குழாய் உடைந்து தடுப்பணை போல் தேங்கிய தண்ணீர் - பொது மக்கள் அதிருப்தி

உடுமலை, ஜன 3- உடுமலை அருகே குடிநீர் குழாய் உடைந்து தடுப்பணை போல் தண் ணீர் தேங்கியும், நடவடிக்கை எடுக் காததால் பொதுமக்கள் அதிருப்திய டைந்துள்ளனர். உடுமலை ஒன்றியம், சின்னவீரம் பட்டியிலிருந்து குறிஞ்சேரி கிராமத் திற்குச் செல்லும் இணைப்புச் சாலை யில் கிராமங்களுக்கான திருமூர்த்தி மலை குடிநீர் திட்ட குழாய்கள் பதிக் கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடை வெளியில் காற்று போக்கிகள் (பிரஷர் வால்வுகள்) அமைக்கப்பட்டுள்ளன. வால்வு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. பலநாட்களாக தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருவதால் அப்பகுதியில் வீணாகி வரும் குடிநீர் தடுப்பணை போல் தேங்கி உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் பல முறை குடிநீர் வடிகால் வாரியத் திற்கும், ஒன்றிய அலுவலகத்திற்கும் தகவல் அளித்தும், புகார் தெரிவித் தும் இதுவரை நடவடிக்கை எடுக் கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் அதிருப்திடைந்துள் ளனர்.

;