tamilnadu

img

சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தின் வர்த்தக சாதனை

சேலம், மார்ச் 13- சேலம் சேகோ சர்வ் நிறு வனத்தின் வர்த்தகம் நடப்பாண்டில் ரூ.1000 கோடி கடந்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். இதைத் தொழிலாளர்கள் வெள்ளியன்று கேக் வெட்டி  கொண்டாடினர். சேலம்-பெங்களூரு சாலையில் குரங்குசாவடி அருகே செயல்பட்டு வரும்  சேகோ சர்வ் நிறுவனம்  கடந்த 1981-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. இங்கு மரவள்ளிக்கிழங்கில்  இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச்  மாவு ஆகியவை தயாரிக்கப்படுகிறது.  இந்த நிறுவனம் மூலம்தான் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. தொடக்கத்தில் 40.63 லட்சம் ரூபாய் விற்பனை செய்த இந்த நிறுவனம், கடந்த ஆண்டு அதிகபட்சமாக 504 கோடி ரூபாய் வர்த்தகம் செய்த நிலையில், நடப்பு ஆண்டில் 1000 கோடி ரூபாய்க்கு இலக்கை அடைவதற்கான வியாபாரப் பணியில் சேகோ சர்வ் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வந்தது. இதன் பலனாக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான விற்பனை இலக்கை தாண்டி 1001 கோடி ரூபாய் வர்த்தகத்தை சேகோ சர்வ் நிறுவனம் எட்டியுள்ளது. அதற் கான பாராட்டு விழா சேலம் சேகோ சர்வ்  நிறுவனத்தில் நடைபெற்றது. நிறுவ னத்தின் தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சேகோசர்வ் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டனர்.  மேலும், தமிழ்மணிக்கு மாலை அணி வித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக் களை தெரிவித்தனர். மேலும் 50 கிலோ அளவில் மிகப் பிரம்மாண்டமான கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந் தனர். இதில் நிர்வாகத்தின் மேலாண்மை இயக்கனர் என்.சதீஷ், மேலாளர் வி. செண்பகராஜா, ஆர்.ரவிக்குமார், வியா பாரிகள் சங்க செயலாளர் வெங்கட்ராமன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.