தருமபுரி அரசு மருத்துவமனையில் இருதய தீவிர சிகிச்சை மையம்
எஸ்.செந்தில்குமார் எம்.பி தகவல்
தருமபுரி, நவ.12- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ரூ3.50 கோடி மதிப்பிலான இருதய தீவிர சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தருமபுரி தலைமை மருத்துவமனை கடந்த 2008ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட புறநோயாளிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் தினசரி சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் 120க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 250க்கும் மேற்பட்ட செவிலியர்களும் உள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு, கண், பல், எலும்பு உள்பட 58 வார்டுகள் உள்ளன. இருப்பினும், இருதய சிகிச்சை பிரிவு வசதி மட்டும் தருமபுரி அரசு மருத்துவமனையில் இல்லை. இதனால், இருதய நோயாளிகள் சேலம் அல்லது பெங்களூருக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. எனவே, தருமபுரி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு துவங்கி சிறப்பு மருத்துவ நிபுணரை நியமிக்க வேண்டுமென தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாரிடம் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதை யடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனை கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.செந்தில் குமார் எம்.பி நேரில் சந்தித்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர இருதய சிகிச்சை மற்றும் அவசர கால விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்க வலியுறுத்தினார். இதனடிப்படையில், தற்போது தேசிய சுகாதாரப் பணிகள் (என்எச்எம்) மூல மாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இந்த நிதியில் இந்த மாதம் இறுதிக்குள், இருதய தீவிர சிகிச்சை மையம் தொடங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பென்னாகரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, அரூர் வட்டார அரசு தலைமை மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளிலும் அவசர கால விபத்து சிகிச்சைப் பிரிவு நிகழாண்டு இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறை வேறுவதோடு, இத்தகைய தீவிர சிகிச்சைகளை இனி சிரமமின்றி தருமபுரியிலேயே பெறமுடியும் என எஸ்.செந்தில்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அழைப்பு
தருமபுரி, நவ.12- தருமபுரி மாவட்ட தாட்கோ மூலம் நலத்திட்டங்கள் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு, துரித மின் இணைப்பு, தொழில் முனைவோருக்கான திட்டங்கள் மற்றும் பெட் ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்ட தொகையில் 50 சதவிகிதம் ஆட்சியர் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப் புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுது வோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதி யுதவி வழங்கப்படும். தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவுக் கணக்கர் நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி போன்ற பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் (ஆன் லைன்) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு 18 முதல் 65 வரை குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 1 லட்ச மாகும். தாட்கோ இணையதள முகவரி http:// application. tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங் களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப் பிக்கும் போது, விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச் சான்றிதழ் எண், சாதிச்சான்றிதழ் எண், குடும்ப வருமான சான்றிதழ் எண், வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம் நேர்காணல் நடத்தப்படும். மேலும், திட்டங் களின் விவரங்கள் இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.