tamilnadu

img

பிளஸ் 1 பொதுத் தேர்வில்

திருப்பூர், மே 8 –பிளஸ் 1 அரசுப் பொதுத்தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதத்தில் 97.93 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிளஸ் 1 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.93 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மாவட்டத்தில் 10,746 மாணவர்களும், 13,238 மாணவிகள் என மொத்தம் 24,903 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில் 10,440 மாணவர்கள், 13,047 மாணவிகள் என 23,487 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2018 கல்வி ஆண்டில் 96.40 சதவீதமாக இருந்த மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் தற்போது 1.53 சதவீதம் அதிகரித்த்துள்ளது.கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 2.57 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 4.5 சதவிகிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 0.64 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

;