tamilnadu

உயிர்களைக் காவுவாங்கும் திம்மநாயக்கன்பாளையம் மேம்பாலம்

பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், மே 30 - உயிர்களைக் காவு வாங்கும் ஊத்துக்குளி திம்மநாயக்கன்பாளை யம் ரயில்வே மேம்பாலத்தில் விபத்தை தடுக்க காவல் துறை, போக்குவ ரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும், உரிய அறிவிப்பு பலகை கள் வைக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் - விஜயமங்கலம் சாலை யில் திம்மநாயக்கன்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டதில் இருந்து தொடர்ந்து ஏராளமான உயிரிழப்பு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முறையில்லாமல் முந்தியபோது மேம்பாலத்திலுள்ள திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு இப்பாலத்தின் மீது விபத்து ஏற்பட்டு இரண்டு உயிர்கள் பலியானது.  இந்நிலையில், கடந்த வியாழ னன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தடுப்புச்சுவர் மீது மோதியதில் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இப்படிப்பட்ட விபத் துகள் ஏற்படுவதை ஆராய்ந்து அதை தடுப்பதற்கு சம்மந்தப்பட்ட அரசுத் துறைகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதன் காரணமாக தொடர்ந்து விபத்துகளும், உயிர் பலியும் நடக்கிறது. 

இந்த மேம்பாலம் குறுகிய திருப் பங்களை கொண்டுள்ளது. இந்த வளைவுகள் தெளிவாகத் தெரியும் வகையில், சாலை வளைவு என காட் டும் ஒளிரும் சின்னங்களை நெடுஞ் சாலைத்துறை வைக்கவில்லை. அத்துடன் எவ்வித விதிமுறையையும் மதிக்காமல் ஜல்லி, கல், மணல், கான் கிரீட் கலவை செல்லும் கனரக வாக னங்களில் இருந்து சிந்தும் கட்டு மான பொருட்கள் மேம்பாலத்தின் இருபுறமும் சிதறி மற்ற வாகனங் களில் செல்வோருக்கு விபத்தை ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. எனவே, மோட்டார் வாகன விதிமு றையை மீறி சாலைகளை நாசப்ப டுத்தும், இருசக்கர வாகனத்தில் செல் வோருக்கு பாதிப்பை ஏற் படுத்தும் இந்த கனரக வாகனங்களின் வேகத் தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை, போக் குவரத்துத் துறை, காவல் துறை ஒருங் கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. ஏற்கெனவே, இது குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக் குளி தாலுகா குழு சார்பில் மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் அளிக்கப்பட் டது. எனினும் அதன் பிறகும் உரிய கவனம் செலுத்தப்படாததால் விபத் துகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன. எனவே உயிரிழப்புக ளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஊத்துக்குளி பகுதி மக் கள் வலியுறுத்துகின்றனர்.

;