tamilnadu

img

ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

ஏற்காடு, மே 5-சுற்றுலா தலமான ஏற்காட்டிற்குபள்ளி கோடை விடுமுறையையொட்டி மலர்காட்சியை கண்டு கழிக்கஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இவர்கள் பிரதான சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, மான்பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம்,லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட் உள்ளிட்ட வியூ பாயின்ட்களிலும், சேர்வராயன் குகை கோவில், ராஜராஜேஸ்வரி கோவிலிலும் சுற்றி மகிழ்ந்தனர்.மேலும், மலர்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட 21 வகையிலான 10 ஆயிரம் பூந்தொட்டிகள், சிலவற்றில் பூக்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளுக்கு மலர்காட்சிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. மேலும் படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் ஏரி பூங்காவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நடப்பட்ட டேலியாசெடிகளில் தற்பொது பெரிய அளவிலா டேலியா பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

;