tamilnadu

கோடையில் உழவு செய்தால் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்

தாராபுரம், ஏப்.22 -தாராபுரத்தில் கோடையில்உழவு செய்தால் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம் என வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தாராபுரம் வட்டாரத்தில் நெற்பயிருக்கு அடுத்த முக்கிய பயிராக மக்காச்சோளம் சாகுபடிசெய்யப்படுகிறது. மக்காச்சோளம் மனிதனுக்கு உணவு பொருளாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயிரிடப்பட்டு விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டி தரும் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. இப்பயிரில் படைப்புழு என்ற புழுவின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. எனவே கோடையில் உழவு செய்து மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என தாராபுரம் வேளாண் உதவி இயக்குநர் லீலாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கோடையில் உழவுசெய்வதால் களைகள் வெகுவாககட்டுப்படுத்தப்படுகிறது. மேலும்மண் அரிமானம் தடுக்கப்பட்டுநீர் வயல்களில் தேங்குவதால் ஈரப்பதம்காக்கப்பட்டு பூச்சி, பூஞ்சாணங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.


மேலும் கோடையில்உழவு செய்வதால் மண்ணில் இறுக்கம் குறைந்து காற்றோட்டம் அதிகரிப்பதால் நுண்ணுயிரிவளர்ச்சி அதிகரிக்கிறது. நீர்கொள்திறன் அதிகரிப்பதால் 20 சதவிகிதம் மகசூல் அதிகரிக்கப்படுகிறது. களை மற்றும் கழிவுகள் மக்கி மண்ணுக்கு உரமாகிறது. கோடையில் உழவு செய்யாவிட்டால் மழைநீர் சேகரிக்கப்படாததுடன் பூச்சிகள் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. பயிர் அறுவடைக்கு பிறகு பயிரின்தாள்கள் நிலத்தில் தேங்குவதால் பெரும்பாலான பூச்சியினங்களுக்கு வாழ்விடமாக அமைகிறது. அடுத்து பயிர் செய்யும்போது பயிரின் வளர்ச்சி முதல் மகசூல் வரை பாதிக்கப்படுகிறது.எனவே, கோடையில் உழவுசெய்வதால் இவை கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் முன்பருவ விதைப்பிற்கும் நிலம் தயாராகிறது. மற்றும் அமெரிக்க படைப்புழுவின் முட்டைகள், கூடுகள் அழிக்கப்படுவதுடன் மண்ணிற்கு அடியில் காணப்படும் பயிரை தாக்கும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகிறது. தாராபுரம் வட்டாரத்தில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறையின் முலம்இனக்கவர்ச்சி பொறி, நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதனை பெற்று பயன்பெறுமாறு வேளாண் உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

;