tamilnadu

img

வார்டு மறுசீரமைப்பில் குளறுபடி அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி, நவ. 15- அவிநாசியில்  பேரூராட்சி பகுதி யில் வார்டு சீரமைப்பிலுள்ள குள றுபடிகளைக் கண்டித்து பேரூ ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி பேரூராட்சியில் வார்டு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செல்போன் செயலி மூலம் வாக்காளர் சரிபார்ப்பு பணி கள் நடைபெற்று வரும் நிலைய யில், 11ஆவது வார்டுக்குட்பட்ட காமராஜ் வீதி பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வாக்காளர்களில் இருவர் 7 ஆவது வார்டுக்குட்பட்ட வி.எஸ்.வி கால னிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் ஏராளமான வாக்கா ளர்கள் பெயர் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பலர் பெயர் கள் விடுபட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை சரி செய்ய வேண் டும் என மாவட்ட ஆட்சியர் உள் ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக் கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட னர்.  இந்நிலையில், இக்குளறுபடி கள் மீண்டும் தொடர்வதால் வெள்ளி யன்று பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தரை யில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து பேரூ ராட்சி அதிகாரி ஈஸ்வரமூர்த்தி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக் கையை மனுவாகக் கொடுக்கு மாறு கேட்டுக்கொண்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் மனு அளித்தனர். மனு வைப் பெற்றுக் கொண்ட அவர் தேர்தல் ஆணையத்திற்கு  அனுப் பப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.