tamilnadu

img

மோசடி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி

கோவை, நவ.6- கோவை மாநகர காவல் ஆணை யாளர் அலுவலக முன்புறம் மோசடி யால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது புகாரின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (48). இவர் ராஜவீதி பகுதியில் உள்ள  டி.கே மார்க்கெட்டில் மிட்டாய் வியா பாரம் செய்து வருகிறார். இவரது குடும்பச் சொத்து பத்திரத்தை ராம் குமார் என்ற உறவினர் அடமானமாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வைத்துள்ளார். முன்னதாக 5 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைப்பதாக சொல்லி 30 லட்ச ரூபாய்க்கு அட மானம் வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மோகன்ராஜ், கோவை மாநகர காவல்  ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் மோசடி புகார் அளித்தார். ஆனால் மோசடி புகாரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தியுள் ளனர். இதனால் மனம் உடைந்த மோகன்ராஜ் செவ்வாயன்று மீண்டும் மாநகர காவல் ஆணையாளர் அலுவல கத்தில் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால், காவல்துறை அதிகாரி கள் உரிய பதில் அளிக்காததால் மன முடைந்த அவர், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்புறம் பிளேடால் கழுத்து, கை என மூன்று பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட் டுள்ளார். இதையடுத்து காவல் துறையினர் இவரை மீட்டு கோவை  அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;