tamilnadu

img

குளறுபடி, குழப்பங்களுடன் துவங்கிய வாக்கு எண்ணிக்கை

கோவை, ஜன. 2 – முன்னேற்பாடுகள் ஏதுமின்றி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண் ணிக்கை குழப்பமும், குளறுபடியு மாக நடைபெற்றது.  தமிழகத்தின் 27 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி களுக்கு 2 கட்டங்களாக நடத்தப் பட்ட தேர்தலில் பதிவான வாக்கு களை எண்ணும் பணி 315 மையங் களில் வியாழனன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. கோவை மாவட்டத்தில் 12 ஊரக  உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கான  வாக்கு எண்ணும் பணி துவங்கியது.  கோவையில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட  ஊராட்சி வார்டு உறுப்பினர்  பதவிக்கும், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 2034 ஊராட்சி  வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 2434 பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 5 ஊரக உள் ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 77.31 சதவிகித வாக்கு பதிவும் இரண்டாம் கட்டமாக 7 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர் தலில் 75.69 சதவிகித வாக்கு களும் பதிவானது. கோவை மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்களில் 3753 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப் பட்டனர். வாக்கு எண்ணும் மையங் களில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முகவர்களை தவிர அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை. ஊடக வியலாளர்களும் கூட பல்வேறு  இடங்களில் அனுமதிக்ப்பட வில்லை. கைப்பேசி மற்றும்  மின்னணு சாதனங்கள் வாக்கு  எண்ணும் மையத்திற்குள் கொண்டு  செல்ல அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக வாக்கு எண் ணிக்கை மையத்தில் உள்ள அலுவ லகர்களுக்கு காலையில் உரிய நேரத்தில் உணவு தரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது. சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில்  வாக்கு பெட்டியில் முத்திரையிடப் பட்ட சாக்கு இல்லாத நிலையில், அரசூர் ஊராட்சியிலும் 12 வாக்கு பெட்டிகளின் முத்திரையிடப்பட்ட சாக்கு இல்லாததால் வாக்குகளை எண்ண முகவர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனால் திமுக மற்றும் அதிமுகவினரிடையே மோதல் உரு வாகும் நிலை உருவானது. வாக்கு  எண்ணிக்கை மையத்தை இரு தரப்பும் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தியதால் பரபரப்பு ஏற் பட்டது. இதனையடுத்து தேர்தல் எண்ணிக்கையை நிறுத்திவைக்க உத்தரவிட்டனர். இதேபோல பல பகுதிகளில் அதிமுகவினர் வெற்றி யை உடனடியாக அறிவித்தும், திமுக உள்ளிட்ட இதர வேட்பாளர் களின் வெற்றியை அறிவிக்க தாம தப்படுத்தியதால் வாக்கு எண் ணிக்கை மையங்களில் தொடர்ந்து சலசலப்பு உருவாகிகொண்டே இருந்தது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற வழிவகுத்தார். இதேபோல மதுக்கரை ஒன்றி யத்தில் உள்ள 9 ஊராட்சிகளின் வாக்குகள் மதுக்கரை அரசு மேல் நிலைப்பள்ளியில் எண்ணப் பட்டது. இதில் மதுக்கரை ஒன்றி யத்திற்கு உட்பட்ட மாவூத்தம்பதி ஊராட்சி தலைவர் பதவிக்கு கோமதி செந்தில் என்கிற சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டார். இவரது வாக்குகள் எண்ணப்பட்டு காலை 12 மணி அளவில் வெற்றி பெற்றதாக உறுதி செய்யப்பட்டது. ஆனால் மாலை 4 மணி நேரம் ஆகியும் இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இதனி டையே வாக்கு எண்ணும் மையத் திற்கு வெளியே எதிர்தரப்பு ஆதர வாளர்களும் மறுவாக்கு எண்ணிக் கை வேண்டும் என கோஷமிட்டு முற்றுகையிட்டனர். இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனால் மதுக்கரை வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற் பட்டது.
அரசு அலுவலர்கள் அதிருப்தி  
சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்காக அரசு அலுவ லர்கள் 20க்கும் மேற்பட்ட மையங் களில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் ஊராட்சி ஒன்றியப் பகுதி வாக்கு எண்ணும்  பணி காயத்ரி மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணிக்கு துவங் கியது. இதில் ஈடுபட்டவர்களுக்கு  காலை 10.30 மணி வரை உணவு  வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அரசு அலுவலர்  வாக்கு எண்ணும் பணியை புறக் கணித்து வெளிநடப்பு செய் தனர். இதனால் வாக்கு எண்ணும்  மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இதையறிந்த காவல் துணை கண் காணிப்பாளர் சந்திரசேகர்  சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரி களிடம்பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக உணவு வழங்கப்படும் என தெரிவித்தார்.  இதையடுத்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இத னால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வாக்கு எண்ணும் பணி நடை பெற்றது. இதேபோல் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் குடிநீர் சுகாதார வசதிகள் செய்யப்படாததால் வாக்கு எண்ணும் பணியில் ஈடு பட்டுள்ள அதிகாரிகள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

;