tamilnadu

img

முன்னாள் மாணவர் அதே கல்லூரியின் முதல்வரானார்

கோவை, ஜன.13- கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல் வராக பேராசிரியர் கே.டி. பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தமிழக வேளாண் பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கும் அரசு வனக்கல் லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்  கடந்த 1985 ம் ஆண்டு மேட்டுப்பா ளையத்தில் துவக்கப்பட்டது. இக்கல்லூரியில் இணைந்து தனது படிப்பை துவக்கிய முன்னாள் மாண வரான பார்த்திபன் அதே கல்லூரியின்  முதல்வராக தற்போது நியமிக்கப் பட்டுள்ளார். கல்லூரி துவங்கிய 1985 ம் ஆண்டில் பிஎஸ்சி வனவியல் படிப்பில் சேர்ந்தார் பார்த்திபன்.  பின்னர் அதே கல்லூரியில் எம்எஸ்சி மற்றும் பிஎச்டி படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெற்றார். இதன் பின்னர் 1992 ஆம்  ஆண்டு முதல்முறையாக தான் படித்த கல்லூரியிலேயே முதுநிலை ஆராய்ச்சி மாணவராக பணியில் இணைந்தார்.பின்னர் 1995 ஆம் ஆண்டு உதவி பேராசிரியராகவும், 2004 ஆம் ஆண்டு இணை பேராசி ரியராகவும் 2012 ஆம் ஆண்டு பேராசி ரியராகவும் தான் படித்த கல்லூரியி லேயே பணியாற்றினார்.  இந்நிலையில் 2015 ஆம் ஆண்டில் வேளாண் காடுகள் திட்ட துறை தலை வரானார். மேலும் தனது ஆராய்ச்சி கள் மூலம் ஆறு புதிய மரவகைகள் நாட்டிற்கு அறிமுகப்படுதியதோடு நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் வனவியல் தொடர்பாக 12 புத்தகங்களை எழுதி யுள்ளார். பெட்ரோல் டீசலுக்கு மாற் றாக மர விதைகள் மூலம் எரிபொ ருள் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியி லும் முக்கிய பங்காற்றினார். மேலும் உலகின் பல்வேறு நாடுக ளுக்கு மரபியல் ஆராய்ச்சி பணிக் ககாக சென்றுள்ள பார்த்திபன் தற்போது தான் படித்து பணியாற்றிய அதே கல்லூரியில் முதல்வராக நியமிக் கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு கடிதம் வந்தவுடன் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயி லும் மாணவ மாணவிகள், பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்தனர். கல்லூரி துவங்கியது முதல் எங்களு டனே பயணித்து மாணவ மாணவி களுக்கு ஒரு  நம்பிக்கையூட்டும் ஒரு சிறந்த முன்னோடி எங்களின் முதல்வ ராக நியமிக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி என தெரிவிக்கின்றனர்.

;