tamilnadu

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு நிலம் வழங்க அழைப்பு கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, ஜன,28- கோவை மாவட்டத்திலுள்ள, ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்து றைக்கு நிலம் வழங்க முன்வரும் நில உடமைதாரர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங் களுடன் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிகபடியான உபரி யாக நிலமுள்ள பட்டாதாரர்கள் அவர்களது நிலங்களை அரசுக்கு வழங்கலாம். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு நிலம் வழங்க முன்வரும் நில உடமைதாரர்கள் சம்மந்தப்பட்ட ஆண வங்களுடன் நேரில் அல்லது தபால் மூலமா கவோ மனு கொடுக்கலாம்.   இவ்வாறு பெறப்படும் நிலங்களை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக வீடு இல்லாத ஏழை ஆதிதிராவிட மக்கள் மற்றும் பழங்கு டியினர் மக்களுக்கு இலவச வீட்டும னப்பட்டா வழங்க அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசித்து வரும் காலனிகளுக்கு மயா னம் மற்றும் மயானப்பாதை அமைக் கவும் அரசால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. எனவே, அதிகபடி யாக உபரியாக நிலமுள்ள பட்டாதாரர்கள் அவர்களது நிலங்களை அரசுக்கு வழங்க லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;