tamilnadu

img

பிரிண்டிங் தொழிற்சாலை இடித்து தரைமட்டம்

நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார்

திருப்பூர், அக். 30– திருப்பூரில் பிரிண்டிங் தொழிற்சாலையை இடித்துத்  தரைமட்டமாக்கி சேதப்படுத்தி யவர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப் பட்டவர் திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித் துள்ளார். இது குறித்து செவ்வாயன்று மாநகர காவல் ஆணையரிடம் பழனிச்சாமி என்பவர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மங்கலம் சாலை பாளையக்காடு 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் கே.கே.பழனிச்சாமி. இவர் ஜூபிடர் பிரிண்டிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை மேற்படி முக வரியில் நடத்தி வருகிறார். இங்கு 20 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த இடம் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் அருகில் உள்ள, காலஞ்சென்ற ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமானதாகும். தற்போது ஜெகநாதன் மகள் கலாவதிக்கு பாத்தியப்பட்டதாகும். மாத வாடகை அடிப்படையில் இந்த இடத்தை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடனடியாக இடத்தைக் காலி செய்து கொடுக்கும்படி உரிமையாளர் கேட்டிருக்கிறார். அப்போது அந்த இடத்தில் கட்டி டம் கட்டியதற்கு கொடுத்த செல வுத் தொகை ரூ.30 லட்சத்தை திரும்பக் கொடுக்கும்படி பழனிச் சாமி கேட்டிருக்கிறார்.  இதுதொடர்பாக இருதரப்பின ருக்கும் உடன்பாடு ஏற்படாத நிலையில், திருப்பூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2019 பிப்ரவரி 11ஆம் தேதி பழனிச்சாமி வழக்குத் தொடுத்து, இடத்தைக் காலி செய்வதற்கு இடைக்காலத் தடை பெற்றிருக் கிறார். பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகி தங்கள் கருத்தைத் தெரி விப்பதற்கு வரும் நவம்பர் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் வாய்தா போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண் டிகையை முன்னிட்டு கடந்த 26ஆம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டு அனைவரும் ஊருக் குச் சென்றுவிட்டனர். தருமபுரி யைச் சேர்ந்த காவலாளி கிருஷ் ணன் (70) என்பவர் பகலில் பிரிண்டிங் பட்டறையில் காவல் இருந்துவிட்டு, அருகில் இருக்கும் அலுவலகத்தில் இரவில் வந்து தங்கியிருக்கிறார். 27ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலை 1 மணியளவில் சுமார் பத்து பேர் ஜேசிபி இயந்திரங்களுடன் பிரிண் டிங் பட்டறைக்கு வந்து அத்து மீறி நுழைவாயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து கட்டி டத்தை இடித்துத் தள்ளி தரை மட்டம் ஆக்கிவிட்டனர். காலை 9 மணிக்கு அங்கு சென்று பார்த்த போது, கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டு இருந்தது. இச்செய லைப் பார்த்த அக்கம் பக்கத்தின ரிடம் கேட்டபோது அதிகாலை 3.30 மணி வரை கட்டிடத்தை இடித்த சத்தம் கேட்டதாகத் தெரி வித்துள்ளனர். மேலும் அங்கிருந்த போர் வெல் மோட்டார், ஜெனரேட்டர், கேட் கதவு, ஜன்னல் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர். அவைகள் தவிர பிரிண்டிங் டேபிள், பிரிண்டிங் மெஷின், கட் டிங் டேபிள், ஸ்கிரீன் பிரேம், வெயிட் மெஷின், பர்னிச்சர், மின் சாதனங்கள், காவலாளி பயன்ப டுத்திய உடமைகள், அவரது சம்பளம் மற்றும் போனஸ் பணம் ரூ.50 ஆயிரம் ரொக்கம், துணி மற்றும் சாயப் பொருட்கள் அனைத்தும் நாசமாகி கட்டிட இடிபாடுகளுக்குள் சேதமடைந் துள்ளன. கட்டிட மதிப்பு மற்றும் இழந்த பொருட்களின் மதிப்பு சேர்த்து மொத்தம் ரூ.40 லட்சம் இழப்பாகி உள்ளது. இதற்கு முழுக் காரணமான ஜெகநாதன் மகள் கலாவதி, அவ ரது கணவர் வெங்கடாசலம் மற்றும் பத்மாவதி, அம்பிகாதேவி, அலுவலக நிர்வாகி சாய்ராம் ஆகி யோர் ஆவர். தான் இத்தொழிலை நம்பி இருப்பதுடன், தன்னைச் சார்ந்து 20 குடும்பங்கள் உள்ளன. நீதிமன்ற வழக்கு நிலு வையில் உள்ள நிலையில் தொழிற்சாலை கட்டிடத்தை இடித்தது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். தற்போது, தான் மிகுந்த மன உளைச்சலில் தொழில் செய்ய முடியாத நிலையில் இருப்பது டன், தொழிலை நாசம் செய்து  கொலை மிரட்டல் விடுக்கிறார் கள். எனவே காவல் துறை இந்த பிரச்சனையில் முழுமையான விசாரணை நடத்தி சட்டப்படி நட வடிக்கை எடுக்கும்படி பழனிச் சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.