tamilnadu

img

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளின் மகளிரணியினர் வியாழனன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே மக்கள் தேதிய கட்சியின் நிறுவனர் சே.ம.நாராயணன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கமலக்கண்ணன், மருதாசலம், ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மு.மனோகரன், பாசு மணி, செந்தில்வேல், எஸ்.ஏ.மாணிக்கம் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

;