tamilnadu

பணத்தை வாங்கி தம்பதியினர் மோசடி

ஈரோடு, ஏப். 25-வீடு கட்டுவதற்காக வாங்கிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, மஞ்சகாட்டுவலசு காந்தி வீதியை சேர்ந்தவர் எம்.ரேவதி (34). இவர் தனது பத்து வயது மகனுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் இவருடன் வேலை செய்த கொடுமுடி வட்டம் செம்மாண்டம்பாளையம் அருகில் உள்ள வண்ணாம்பாறையைச் சேர்ந்த யோக பிரியாமற்றும் அவரது கணவர் செந்தில்குமார் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரேவதி தனக்கு சொந்தமான பூர்வீக வீடு ஒன்றை விற்று வங்கியில் பணம் வைத்திருந்தார். இதை தெரிந்து கொண்ட யோக பிரியா மற்றும்அவரது கணவர் செந்தில்குமார் ஆகிய இருவரும் மொடக்குறிச்சியில் ரேவதி வசிக்கும் வீட்டிற்கு சென்று சொந்தமாக நாங்கள் வீடு கட்டி வருகிறோம். ஆகையால் வீட்டு வேலைக்கு பணம் கடனாக தந்து உதவுமாறும், உரிய வட்டியை தருவதாகவும் சொல்லி 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வாங்கிய பணத்திற்கான வட்டியும் தரவில்லை அசலையும் தரவில்லை. பலமுறை பணத்தை கேட்டும் தரமறுத்துள்ளார்.இந்நிலையில் புதனன்று மீண்டும் பணத்தை கேட்டுள்ளார் ரேவதி. அப்போது மீண்டும் மீண்டும்பணத்தை திருப்பி கேட்டால் கணவன் மனைவிஇருவரும் செத்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ரேவதி மனு அளித்தார்.

;