tamilnadu

img

முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை

வெள்ள அபாய எச்சரிகை

கோபி, அக். 21- பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலை யில், பவானி ஆற்றின் கரையோ ரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதி களில் பெய்து வரும் கனமழையி னால் அணைக்கு நீர் வரத்து அதி கரிகத் தொடங்கியுள்ளது. தற் போது அணையின் நீர் மட்டம் 102 அடிக்கும் மேல் உள்ளதால்  அணையிலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் பவானி ஆற் றில் உபரி நீர் திறந்துவிடப்படும். இதனால் கோபிசெட்டிபாளை யம், அந்தியூர் ஆகிய தாலுகாவிற் குட்பட்ட தூக்கநாயக்கன்பாளை யம், பங்களாபுதூர், கொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசப்பா ளையம், துறையம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரா மங்களுக்கு வட்டார வளர்ச்சித் துறையின் சார்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல் லுமாறும், ஆற்றில் இறங்கி துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை ஆற்றில் இறங்கா மல் பாதுகாத்துக் கொள்ளவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் உபரிநீர் திறக் கப்படும் பட்சத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரை யோரம் உள்ள வீடுகளில் வெள் ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ள தால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து பாது காக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ள அபா யம் ஏற்பட்டுள்ளதால் கோபி செட்டிபாளையம் கோட்டாட்சி யர் ஜெயராமன் தலைமையில் வட்டாட்சியர்கள், உதவி வட் டாட்சியர்கள், வருவாய் ஆய்வா ளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுப்பணித்துறை யினர், காவல்துறையினர், தீய ணைப்பு மற்றும் மீட்புகுழுவினர் என அனைத்துத்துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர்.

;