tamilnadu

ஈரோடு மற்றும் நாமக்கல் முக்கிய செய்திகள்

அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை

ஈரோடு, ஏப். 28-ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் வரும் மே 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்கும் இடம் மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள், விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்காக மாவட்ட அளவிலான தேர்வு வரும் மே மாதம் 9ஆம் தேதி ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்களுக்கான தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து,வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, பளு தூக்குதல், கபடி,மேஜைபந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகிய போட்டிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல் மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால் பந்து, வாள் சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ,பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகிய போட்டிகளுக்கும் தேர்வு நடைபெறும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம்கொண்டுள்ள மாணவ, மாணவிகள் றறற.ளனயவ.வn.படிஎ.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து மே 7ஆம்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். நேரில்சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.



உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

நாமக்கல், ஏப். 29-நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலில் வாக்களிக்கும் வாக்கு சாவடி மையங்களின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு வாரியாக அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகள் குறித்து ஏதேனும் மறுப்பு அல்லது கருத்து தெரிவிக்க விரும்புவோர் மே-2 அல்லது அதற்கு முன்னரே தொடர்புடைய தேர்தல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர், செயல் அலுவலர்களிடம் எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் விடுத்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

;