districts

img

ஈரோடு: கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றக்க் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஊராட்சியைப் பேரூராட்சியாக மாற்றக்கூடாது என வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்டது கவுந்தப்பாடி கிராம ஊராட்சி. இங்கு சுமார் 6000 விவசாயத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டை பெற்றுள்ளனர். நிலையில் இந்த கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட விவசாயத் தொழிலாளர்கள் தங்களது கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்த கூடாது என வலியுறுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். மேலும் வீட்டு வரி சொத்து வரி குடிநீர் வரி உயர்விலிருந்து தங்களை விடுபடும் வகையில் பேரூராட்சி ஆக்கும் முடிவை கை விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்