tamilnadu

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, செப். 17- குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந் துறை சென்னிமலை சாலையில் பிடாரியூர் அடுத்து 1010 நெசவா ளர்கள் காலனி பிரிவு உள்ளது. இப்பகுதியில் கடந்த 2 மாத கால மாக முறையாக தண்ணீர் விநி யோகம் செய்யப்படுவதில்லை. குறிப்பாக, இப்பகுதி மக்களுக்கு பெருந்துறை கூட்டு குடிநீர் திட் டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தண்ணீர் சரியாக வருவதில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை ஒரு வீட்டிற்கு வெறும்  4 குடம் தண்ணீர் விநியோகி கப்படுகிறது. ஆகவே, குடிநீர் முறையாக வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் அரசு அதி காரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தபோதி லும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் செவ்வா யன்று 1010 நெசவாளர் காலனி பிரிவில் சாலையில் காலிக்குடங்க ளுடன் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களு டன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதில் அடுத்த ஒரு வாரத்தில் முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். அதனடிப் படையில் பொதுமக்கள்  அனை வரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வாலிபர் சங்கத்தினர் மனு

இதேபோல், ஈரோடு மாவட் டம், சிவகிரி, நால்வர் மேடம் திருக்கோவில் கிணற்றில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திருவிக தெரு, ஔவை யார் தெரு, ஜீவா தெரு ஆகிய மூன்று தெருக்களுக்கும் நால்வர் மேடம் திருக்கோவில் மேல் நிலைத் தொட்டி மூலம் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளாக கிணற் றில் தண்ணீர் இல்லை. இதைய டுத்து ஜீவா தெருவில் இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  அதேநேரம், ஔவையார் தெரு, திருவிக தெரு பொதுமக் கள் ஆற்றுத் தண்ணீரை மட் டுமே நம்பியுள்ள நிலையில், அக்குடிநீரும் 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப் படுகிறது. எனவே, அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறும் அமைத்து நால்வர் மேடம் மேல்நிலைத் தொட்டி மூலம் தண்ணீர் விநி யோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நூற் றுக்கும் மேற்பட்டோர் சிவகிரி செயல் அலுவலரிடம் மனு அளித் தனர்.

தாராபுரம்

தாராபுரம் நகரில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை, நகராட்சி நிர்வாகம் 30வார்டுகளுக்கும் குழாய் மூலம் விநியோகம் செய்கிறது. இந்நிலையில், கடந்த ஒருவாரமாக விநியோகிக்கப்ப டும் குடிநீர் மாசடைந்து வருவதாக வும், துர்நாற்றம் அடிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகித்து வருகின்றனர்.  ஒரு வாரத்திற்கு பிறகு ஜவகர் நகரில் திங்களன்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசியதால் குடிநீரை பிடிக்காமல் அலங்கியம் சாலை காவல்நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட முயன்ற னர். தாராபுரம் காவல்துறையின ரும், நகராட்சி அதிகாரிகளும் சாலைமறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுத்தமான குடி நீர் வழங்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதி கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் அனை வரும் கலைந்து சென்றனர்.
 

;