சேலம், மே 5-மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி ஞாயிறன்று சேலத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் சார்பில் பத்தாவது தமிழ்நாடு மாநில அளவிலான பெஞ்ச் பிரஸ் வலுதூக்கும் போட்டி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் திடலில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 53 கிலோ, 105 கிலோ, 120 கிலோ என்ற எடை பிரிவிலும், பெண்கள் பிரிவில் 43 கிலோ, 63 கிலோ, 72 கிலோ, 84 கிலோ என்கிற எடை பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றது. இந்த வலுதூக்கும் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து திரளான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.இதில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.